அலங்கோலமாக கிடந்த 30 வயது பெண்.. உடலில் உயிர் பிரியும் நேரத்தில் 28 வயசு அரக்கர்கள் செய்த கொடூரம்..
காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள திம்மசமுத்திரம் ஊராட்சி, கரியன் கேட் அருகே காந்தி நகரைச் சேர்ந்த இல்லத்தரசி அஸ்வினி (வயது 30), நகை திருட்டு முயற்சியின் போது மர்ம நபர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான தமிழ்வாணன் (வயது 28) என்பவரை பொன்னேரிக்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். நடந்தது என்ன? கடந்த ஜூலை 24 அன்று, அஸ்வினி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, இரவு கரியன் கேட் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். அவரது கணவர் ஜெய் சுரேஷ், செங்கல்பட்டில் விடுதி காப்பாளராகப் பணிபுரிவதால், அஸ்வினி பெரும்பாலும் தனது இரு குழந்தைகளுடன் (11 வயது மகள் மற்றும் 2 வயது மகன்) வையாவூர் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். ஆனால், அன்று இரவு தனது வீட்டில் தனியாக இருந்தார்.மறுநாள் நண்பகல் ஆகியும் அஸ்வினி திரும்பாததால், செல்போன் 'ஸ்விட்ச் ஆஃப்' ஆக இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரது வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்ப...