தமிழக அரசு முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் மரணம்! உண்மையான காரணம் என்ன தெரியுமா..?
சென்னை, செப்டம்பர் 24: தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (56), உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், சென்னை ஆயிரம் விளக்கு உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், அரசு மற்றும் நிர்வாக வட்டாரத்தில் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.1997ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பீலா வெங்கடேசன், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பான பணியை அளித்து வந்தார். குறிப்பாக, கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக பொறுப்பேற்று, மாநிலத்தில் தடுப்பூசி இயக்கம் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு விரிவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார். அவரது திறமையான நிர்வாகம், பல்வேறு சவால்களை சமாளிக்க உதவியது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தின் வாழையடி ஊரைச் சேர்ந்த பீலா வெங்கடேசன், காவல்துறை முன்னாள் டி.ஜி.பி. எல்.என். வெங்கடேசனின் மகளும், சாத்தான்குளம் தொகுதி முன்னாள் எ.மி.எல்....