Posts

Showing posts with the label Dayson Watanabe

“வாழ்த்துகள் குவிந்ததால் நின்றுபோன கல்யாணம்..!” குடியை கெடுத்த 'பெஸ்டிகள்' இப்போ இந்த ட்ரெண்ட் வேறயா?

Image
திருமணத்துக்கு முன் நண்பர்கள் வாழ்த்து சொல்வதும், சிறிய சர்ப்ரைஸ் கொடுப்பதும் வழக்கம். ஆனால் அந்த சர்ப்ரைஸ் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியது. நியூயார்க்கைச் சேர்ந்த உள்ளடக்க உருவாக்குநர் மோனிகா சான் லூயிஸ் திருமணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அவரது நெருங்கிய நண்பர்கள், திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கத் திட்டமிட்டனர். அறை அலங்கரிக்கப்பட்டு, மோனிகாவை உள்ளே அமரவைத்தனர். பின்னால் நின்ற ஒருவர் அவரது கண்களை மூடி, “சர்ப்ரைஸ்” என்று கத்தினார். கண்கள் திறந்ததும் ஒரு வீடியோ காட்டப்பட்டது. அதில் மோனிகாவின் பழைய கால நண்பர்கள் — முன்னாள் காதலர்கள் என்று சொல்லப்படும் நபர்கள் — ஒவ்வொருவராக வந்து திருமண வாழ்த்து தெரிவித்திருந்தனர். எதிர்பாராத அந்தக் காட்சியை மோனிகா சிரித்தபடியே பார்த்தார். அந்த எதிர்வினையை நண்பர்கள் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். “இது என்ன புது ட்ரெண்ட்” என்று பலரும் பகிர, வீடியோ வேகமாகப் பரவியது. சில தளங்களில் 8 லட்சத்துக்கும் மேல் பார்வை எட்டியதாகவும், இன்ஸ்டாகிராம் பதிவில் லட்சக்கணக்கான விருப்பங்கள் கிடைத்ததாக...