Posts

Showing posts with the label Actor Dhruv Vikram

முதல் படமே இப்படியா..? - பரிதாபமான நிலையில் துருவ் விக்ரம்

Image
நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார் என்ற செய்தி தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.  இயக்குனர் பாலாவுடன் முதல் படம். வாவ் சூப்பர் என்றனர் ரசிகர்கள். அதிலும், தெலுங்கில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்றனர். அடி தூள்.. வெல்கம் குட்டி சியான் என்றனர். வர்மா என்ற தலைப்பில் படம் ஆரம்பிக்கபட்டது. ஆனால், படம் முடிவதற்கு போதையில் கார் ஒட்டிய கேஸ் ஒன்றில் துருவ் விக்ரம் மீது ஒரு கரும்புள்ளி விழுந்தது. சரி, வயசு பசங்க அப்படிதான் இருப்பாங்க என்று விட்டு விட்டனர். அதன் பிறகு முதல் படமான "வர்மா" ட்ராப் ஆகிப்போனது. படம் எடுத்து  முடித்த பிறகு படத்தில் காட்சிகள் சரியில்லை. அது சரியில்லை. இது சரியில்லை என மொத்த படத்தையும் தூக்கி குப்பையில் போட்டு விட்டார் நடிகர் விக்ரம். இதனால், பாலாவுக்கும் - விக்ரமுக்கும் மோதல் தொடங்கியது. ஆனால், விக்ரம் "ஆதித்ய வர்மா" எனஅதேபடத்தை ரீ-ரீமேக் செய்தார். படம் வெளியாக தாமதமானது. பொதுவாக, பெரிய ஹீரோ படம் என்றாலும் குறிபிட்...

வாவ்..! - அதித்ய வர்மா முதல் நாள் மட்டும் இவ்வளவு வசூலா..??? - மிகப்பெரிய ஓப்பனிங்

Image
நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் நேற்று ஆதித்ய வர்மா படம் திரைக்கு வந்தது. இந்த படம் தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.  இப்படம், சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் இளைஞர்களிடம் வேற லெவால் வரவேற்பு தான். இந்நிலையில், முதல் நாளான நேற்று "ஆதித்ய வர்மா"  சென்னையில் மட்டுமே ரூ 34 லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ளது.  இது துருவ் விக்ரமின் முதல் படம். அறிமுகமாகும் முதல் படத்திலேயே இவ்வளவு வசூல் வருவது எல்லாம் சாதரண விஷயமில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். விக்ரமின் மகனுக்கு கண்டிப்பாக இது மிகப்பெரிய ஓப்பனிங் என்பதில் சந்தேகமே இல்லை.

அப்பா இதை கைவிட வேண்டும் என்று தினமும் கடவுளை வேண்டினார் என் அம்மா..! - விக்ரம் மகன் துருவ் ஒப்பன் டாக்..!

Image
அப்பா சினிமாவில் நடிக்க கூடாது என என் அம்மா தினமும் வேண்டினார் என்று விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கூறியுள்ளார். ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் துருவ் விக்ரம்.  இந்த படம் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய விக்ரம் அதனை இயக்குனர் பாலா-விடம் கொடுத்து படமாக "வர்மா" என்ற தலைப்பில் எடுக்க சொன்னார்.  ஆனால், பாலா எடுத்த படத்தில் திருப்தி இல்லாத காரணத்தினால், வேறு இயக்குனர் வைத்து ஆதித்ய வர்மா என்ற தலைப்பில் வேறு இயக்குனரை வைத்து எடுத்துள்ளார் விக்ரம். இந்நிலையில், இந்த படம் எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இன்றி இன்று வெளியாகியுள்ளது.  இந்த படத்தை ஆரம்பிக்கும் போது இருந்த அந்த கிரேஸ் மற்றும் எதிர்பார்ப்பு இப்போது சுத்தமாக இல்லை என்பதே உண்மை. இதற்கு, பாலா படம் ட்ராப் ஆனது, குடிபோதையில் போக்கு வரத்து போலீசாரிடம் சிக்கிய துருவ் விக்ரம் போன்றவை காரணம்.  இன்று படம் வெளியாகியுள்ள நிலையில், பிரபல பத்திரிகை ஒன்ரிறிற்கு பேட்டி அளித்த துருவ் விக்ரம் '...

நடிகர் விக்ரமிற்கு இயக்குனர் பாலா அனுப்பிய நோட்டிஸ்..! - என்ன காரணம்..???

Image
நடிகர் விக்ரம் தற்போது தன் படங்களில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி தன் மகன் துருவ்வின் முதல் படமான ஆதித்ய வர்மா ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டார். படத்தையே அவர் தான் இயக்குகிறார் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலா நடிகர் விக்ரமுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் பாலா இயக்கிய "வர்மா" படம் சுத்தமாக சரியில்லை என கூறி மொத்தமாக முழு படத்தையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு தற்போது மீண்டும் வேறு பெயரில் படமாக்கி வருகின்றனர். அந்த படத்தில் நான் இயக்கிய காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது என்று தான் பாலா எச்சரித்து இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.