ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்.. உண்மை காரணத்தை மூடி மறைக்க படக்குழு.. குலை நடுங்க வைக்கும் தகவல்!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஆர்யா, ‘அட்டகத்தி’ தினேஷ், அசோக் செல்வன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நீலம் புரொடக்சன் தயாரிப்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தின் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம், விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில், விழுந்தமாவடி கிராமத்தில் கடந்த ஜூலை 10 முதல் நடைபெற்று வந்த படப்பிடிப்பில், கார் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜின் மகனான மோகன்ராஜ், ஸ்டண்ட் யூனியனின் முக்கிய நிர்வாகியாகவும், திறமையான சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார். படப்பிடிப்பின்போது, கார் பறக்கும் ஸ்டண்ட் காட்சியில் மோகன்ராஜ் காரை இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்து ...