கடற்கரை பகுதியில் விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம் - அடித்தது ஜாக்பாட்.!
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்த நபர் டெய்லர் இவனோப். சமீபத்தில், அங்குள்ள கடற்கரை பகுதி ஒன்றிற்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, பாட்டில் ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். அதனருகில் சென்ற அவர் யாரவது குடித்து விட்டு இங்கே வீசி சென்றிருப்பார்கள் என்று தான் நினைத்தார். ஆனாலும், அதை எடுத்துப்பார்த்தார். அதற்குள் ஒரு காகிதம் சுற்றிய நிலையில் இருந்தது. இதையடுத்து அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என அறிந்துகொள்ளும் ஆவலுடன் பாட்டிலை திறந்தார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவர் எடுத்த படித்த அந்த கடிதம் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது. அவருக்கு ரஷிய மொழி தெரியாது என்பதால் குழம்பி போன இவர் அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து விவரத்தை கூறி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அதனுடன், ரஷிய மொழி தெரிந்தவர்கள் யாராவது கடிதத்தில் இருப்பதை மொழி பெயர்த்து சொன்னால், நன்றாக இருக்கும் என்று அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். டெய்லர் இவனோப்பின் இந்த பதிவு முகநூலில் அதிகம் பகிரப்பட்டு விரலானது. அதில் ஒருவர...