கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினையே தவெக குஜிலிமஸ்த் செய்தது எப்படி? வெளிவந்த ரகசியம்!
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொளத்தூர் தொகுதி முடிவு. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபு, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒரு முதல்வர் வேட்பாளராக இருந்து அடுத்த தேர்தலில் தோல்வியை சந்தித்த இரண்டாவது முதல்வர் என்ற வரலாற்றுப் பெயரை மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார்.தவெக போன்ற புதிதாக தொடங்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் எப்படி ஒரு அனுபவமிக்க முதல்வர் வேட்பாளரை தோற்கடிக்க முடிந்தது என்ற விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில், கொளத்தூர் தொகுதியில் நடந்தது கிட்டத்தட்ட அதிமுக-தவெக கூட்டணி போன்ற வாக்கு பரிமாற்றமே என்பது தெரியவந்துள்ளது. வி.எஸ்.பாபு யார்? கொளத்தூர் மக்களுக்கு பரிச்சயமான 'அதிமுக முகம்' கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு (75), கொளத்தூர் பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமான அரசியல் தலைவர். ஒரு காலத்தில் திமுகவில் வட சென்னை மாவட்ட செயலாளராக பணியாற்றியவர். 2006-ல் புரசைவாக்கம் தொ...