இப்படி உடவுறவு கொண்டால் குழந்தை பிறக்காது.. மருத்துவர் வெளியிட்ட ரகசியம்..
குழந்தை பிறக்காமல் (கருத்தடை செய்ய) உடலுறவு கொள்ள நிறைய பாதுகாப்பான முறைகள் உள்ளன. இன்றைய சூழலில், குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுத்துகொள்பவர்கள் ஒரு பக்கம் இருக்கின்றனர். இதற்க்கான, கருத்தரிப்பு மையங்கள் புற்றீசல் போல முளைத்துள்ளன. அதே நேரம், எதிர்பாராத கர்ப்பம் காரணமாக, கருக்கலைப்பு செய்யும் தம்பதிகள், காதலர்கள் ஒரு பக்கம் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர் என்பதும் உண்மை. இப்படி தேவையில்லாத கர்ப்பத்தை தவிர்ப்பது எப்படி..? எப்படி உடலுறவு கொண்டால், குழந்தை பிறக்காது என்று மருத்துவர் ராஜபிரியா ஐயப்பன் விரிவான தகவல்களை பதிவிட்டுள்ளார். இவை எல்லாம் சரியாகப் பயன்படுத்தினால் 99% வரை கரை பாதுகாப்பு தரும். முக்கியமான முறைகளை எளிமையாகப் பட்டியலிடுகிறேன்: மிகவும் நம்பகமான முறைகள் (99%–99.9% பாதுகாப்பு) 1. ஆணுறை (Condom) மலிவு, எங்கும் கிடைக்கும், HIV மற்றும் பால்வினை நோய்களில் இருந்தும் பாதுகாக்கும். சரியாக அணிய வேண்டும் (முனையில் சிறிது இடம் விட்டு, காற்று புகாமல்). 2. பெண்களுக்கான கருத்தடை மாத்திரை (Oral Contraceptive Pills) MalaD, OvralL போன்றவை. தினமும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும். டாக...