Posts

Showing posts with the label domestic helpers arrested

கை கால் கட்டப்பட்ட நிலையில் சடலாமாக 52 வயது பெண்! 3 சிறார்கள்! தொடர்ந்து 18 முறை! CCTVயில் பதிவான பகீர் காட்சி!

Image
ஒரு வாரமாக அந்த வீட்டின் முன் கதவு அப்படியே. உள்ளே யாரும் நடமாடவில்லை. வெளியே செல்வதாகவும், எப்போது திரும்புவதாகவும் அக்கம் பக்கத்தினரிடம் சொல்லிவிட்டுப் போகும் பழக்கம் கொண்டவர் அந்த 52 வயது பெண். ஆனால் இந்த முறை எந்தச் செய்தியும் இல்லை. புதுடெல்லிக்கு அருகிலுள்ள மீரட் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு. அங்கே தனியாக வசித்து வந்தார் சீமா தேவி. வெளிநாட்டில் பணிபுரியும் இரு மகன்களின் தாய். அக்கம் பக்கத்தினரிடம் அம்மாவைப் போலவே பழகுபவர். யாருக்காவது மளிகை தேவைப்பட்டால் சொன்னால் வாங்கித் தருவார். வீட்டு வேலைக்கு வரும் இளைஞர்களிடமும் அன்பாகவே நடந்துகொள்வார். கடந்த நான்கு நாட்களாக அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வரத் தொடங்கியது. குடியிருப்பு வாசிகள் முதலில் பொறுமையாக இருந்தனர். பிறகு கதவு வெளியிலிருந்து பூட்டப்பட்டிருப்பதையும், உள்ளே யாரும் இல்லாததையும் கண்டு பயந்தனர். உடனே அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தொலைபேசி செய்தனர். காவல்துறையினர் விரைந்து வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் சீமா தேவி உயிரிழந்த நிலையில் கிடந்தார். அடு...