சங்கீதா எனக்கு மகள் மாதிரி! விஜய் கிட்ட இதை மட்டும் பண்ண சொல்லுங்க! SAC கூறிய தகவல்!
நடிகர் தளபதி விஜய்யின் தந்தையும், புகழ்பெற்ற இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் (S.A. Chandrasekhar) அவர்கள், நடிகை வனிதா விஜயகுமார் நடத்தும் தனியார் யூடியூப் சேனலில் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது மகன் விஜய் மீதான அளவுகடந்த அன்பு, பாசம், அவரை வளர்த்த விதம், சினிமா பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்த பேட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் மீதான அளவில்லா பாசம் பேட்டியில் எஸ்.ஏ.சி., "நான் விஜயை எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை. அவனை நான் ரொம்ப நேசிச்சேன். குழந்தைப் பருவத்தில் ஹோம்வொர்க் செய்யாவிட்டால் ஸ்கேல் வைத்து அடித்தது உட்பட சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால், அது என் அன்பின் வெளிப்பாடு தான். இன்றும் என் கண்ணுக்குஅவன் 5-6 வயது மகனாகவே தெரிகிறான்" என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார். மேலும், "ஆம்பளைப் பிள்ளைகளுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் விஜய்க்கு நான் தான் ரொம்ப பிடிக்கும். நாங்கள் இருவரும் அதிகம் பேசிக்க மாட்டோம், ஆனால் ஒருவருக்கொருவர் மீதான அன்பு ஆழமானது" என்றும் தெரிவித்தார்...