Posts

Showing posts with the label Sandakozhi

விஷால் தன்ஷிகா திடீர் திருமண பின்னணி! பல கோடி கடன்! ஏமாற்றிய துரோகிகள்!

Image
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாகவும், பக்கத்து வீட்டு பையன் தோற்றத்துடனும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஷால்.  சண்டைக்கோழி, துப்பறிவாளன் போன்ற படங்களில் தனது அதிரடி நடிப்பால் புகழ் பெற்ற இவர், சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்து, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.  சினிமா விமர்சகர் ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, ஒரு நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு குறித்து பேசியபோது, விஷாலின் தற்போதைய மனநிலை மற்றும் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.  விஷால், அவன் இவன் படத்தில் இயக்குநர் பாலாவின் வேண்டுகோளுக்கு இணங்க, கண்ணை தைத்து நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கு மேல் நீடித்ததால், அவருக்கு கடுமையான ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) பிரச்சனை ஏற்பட்டது.  இதற்காக எடுத்த மருந்துகளின் பக்கவிளைவுகள், அவரது உடல் மற்றும் மனநிலையை பாதித்தன. படப்பிடிப்பு தளங்களில், அவர் அறையில் தூங்குவதும், மாத்திரைகள் எடுத்துக்கொண்டு ஓய்வெடுப்பதும் தொடர்ந்தது. இதனால், இயல்பாக செயல்பட முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளானார்....