காதல் முறிவுக்கு முன் கடைசியாக ஒரு முறை பாலியல் உறவுக்கு ஒப்புக்கொண்ட 15 வயசு பெண்.. அரங்கேறிய கொடூரம்..
மும்பையின் அந்தேரி பகுதியில், பவானா என்ற தாய் மற்றும் அவரது மூத்த மகள் மித்தாலி, 15 வயது வன்ஷிதாவை காணவில்லை என்று கவலையில் ஆழ்ந்தனர். வன்ஷிதா, ஸ்பெஷல் கிளாஸ் என்று கூறி காலையில் வீட்டை விட்டு கிளம்பினாள். மாலை 4 மணிக்கு திரும்ப வேண்டியவள், இரவு 8 மணி ஆகியும் வரவில்லை. அவளது மொபைல் ஸ்விட்ச் ஆஃப். நண்பர்களிடம் விசாரித்தபோது, ஸ்பெஷல் கிளாஸ் மதியமே முடிந்துவிட்டதாகத் தெரிந்தது. பவானாவும் மித்தாலியும் அந்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், ஆனால் ஆரம்பத்தில் காவல்துறை வழக்கமான பதில்களை மட்டுமே அளித்தது. திகிலூட்டும் கண்டுபிடிப்பு அடுத்த நாள், ஆகஸ்ட் 26, 2022 காலை 6 மணிக்கு, நைகான் ரயில்வே நிலையத்தில் ஒரு சூட்கேஸ் கிடைத்தது. அதில் ரத்தக் கறைகளும், வெளியே தெரிந்த நான்கு விரல்களும் ஒரு பயணியின் கவனத்தை ஈர்த்தன. காவல்துறை சூட்கேஸை திறந்தபோது, 15-18 வயது மதிக்கத்தக்க பெண்ணின் நிர்வாண உடல், பெட்ஷீட்டில் சுற்றப்பட்டு, கத்திக் குத்துகளுடன் கிடந்தது. மும்பையில் காணாமல் போன பெண்கள் பற்றிய புகார்களை ஆராய்ந்தபோது, வன்ஷிதாவின் புகார் கவனத்திற்கு வந்தது. பவானாவும் மித்தாலியும் அடையாளம் காண அழைக்கப்ப...