உங்களால இதை கூட பண்ண முடியாது.. கரூர் விவகாரம்.. நடிகர் சிபி ராஜ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..
கரூர், அக்டோபர் 5 : தமிழக வெற்றி கழகத்தின் (TVK) மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம், இந்திய அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புக்கு யார் காரணம் என்பது குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருந்த பல பிரபலங்கள் இப்போது அவருக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, நடிகர் சத்யராஜின் குடும்பத்தில் 'ஒரே வீட்டில் மூன்று திசைகள்' என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற TVK-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் காரணமாக 41 அப்பாவி உயிர்கள் பறிபோனது மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சிக்கு அனுமதி மதியம் 12 மணிக்கு கிடைத்திருந்தபோதிலும், TVK தலைவர் விஜய் மாலை 7 மணிக்கு அப்பகுதிக்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகரித்து, பெரும் சோகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு TVK நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பின்மை மற்றும் தமிழக காவல்துறையின் பாதுகாப்பின்மை காரணம் என்று சிலர் விமர்சிக்கின்றனர். "இந்த உயிரிழப்ப...