சிக்காமல் எப்படி பண்ணுறது..? காதலனை நாய் போல நினைத்த காதலி.. அம்பலப்படுத்திய கூகுள் ஹிஸ்டரி..
தமிழக-கேரள எல்லையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் களியக்காவிளை அருகே பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் (23) என்ற இளைஞர், காதலி கிரீஷ்மாவால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு தமிழகத்தையும் கேரளாவையும் உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காதலின் தொடக்கம் மற்றும் மோசமான முடிவு நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி ரேடியாலஜி பயின்று வந்த ஷாரோன் ராஜ், மேல்பாலை அருகே ராமவர்மஞ்சிரை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற மாணவியை பேருந்து பயணத்தில் சந்தித்து காதலித்தார். இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக சுற்றுலாத் தலங்களுக்கு செல்வது, செல்ஃபி மற்றும் வீடியோக்கள் எடுப்பது என நெருக்கமாக இருந்தனர். இந்த நிலையில், கிரீஷ்மாவின் குடும்பத்தினர் அவருக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயித்தனர். இந்தத் திருமணத்திற்கு ஷாரோன் தடையாக இருப்பார் என அஞ்சிய கிரீஷ்மா, அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். காதலனை நாய் போல நினைத்த காதலி.. கிரீஷ்மா, ஷாரோனை தனது வீட்டிற்கு அழைத்து, 2022 அக்டோபர் 14 அன்று ஆயுர்வேத கஷாயம் எ...