இந்த ஜீவா பட நடிகை ஒரு திருநங்கை! பிரபல நடிகர் கூறிய அதிர்ச்சி தகவல்!
பிரபல நடிகரும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன், தனது ‘சினி கழுகு’ யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், நடிகை ஹனி ரோஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து, தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 2011-ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மலையாள நடிகை ஹனி ரோஸ் ஒரு திருநங்கை என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும், பொதுவாக திருநங்கைகளை அவர்களது குடும்பத்தினர் ஒதுக்கி விடுவது வழக்கமாக இருந்தாலும், ஹனி ரோஸ் ஒரு வித்தியாசமான திருநங்கை என்றும், அவரால் குடும்பத்திற்கு நல்ல வருமானம் கிடைப்பதால், அவரை குடும்பத்தினர் தங்களுடன் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். கூடுதலாக, கடை திறப்பு விழாக்களில் ஹனி ரோஸை அழைப்பதற்கு இதுவே முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், இந்தக் கூற்று குறித்து விசாரித்ததில், ஹனி ரோஸ் ஒரு திருநங்கை என்பதற்கு எந்தவொரு உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்தத் தகவலை முதல் முதலில் பயில்வான் ரங்கநாதனே வெளியிட்டுள்ளார், இது சமூக வலைதளங்க...