Posts

Showing posts with the label Snapchat

என்னடா செஞ்சீங்க.. 10ம் வகுப்பு மாணவி கர்ப்பமானதால் அதிர்ச்சி.. விசித்திரமான முறையில் சீரழித்த கொடூரன்கள்..

Image
சென்னை : சமூக வலைதளங்களின் தாக்கம் இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு சாட்சியாக மாறியுள்ளது சென்னை புரசைவாக்கத்தில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம். ஸ்னாப்சாட் செயலி வழியாக அறிமுகமான ஆண் நண்பருடன் பழகி, காதலில் விழுந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி, கர்ப்பமடைந்து, பின்னர் கருக்கலைப்பு செய்து கொண்ட சம்பவம் பெற்றோருக்கும் சமூகத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் மாணவி போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். புரசைவாக்கத்தில் வசிக்கும் ஒரு ஆசிரியை, தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது மகள், அரசுப் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இளம் வயதிலேயே செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடும் பழக்கம் கொண்டிருந்த இந்த மாணவி, ஸ்னாப்சாட் செயலியில் லியோ (இயற்பெயர் லிங்கோ எனக் கூறப்படுகிறது) என்பவருடன் அறிமுகமானார். துபாயில் இருப்பதாகக் கூறி அவர் மாணவியுடன் சாட் செய்து நட்பை வளர்த்தார். பின்னர், காதலாக மாறிய இந்த ...