Posts

Showing posts with the label Society Paavangal

பரபரப்புக்கு மத்தியில் அடுத்த வீடியோவை இறக்கிய கோபி சுதாகர்.. பத்தி எரியும் இண்டர்நெட்..

Image
‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி மற்றும் சுதாகர், ‘சொசைட்டி பாவங்கள்’ வீடியோவால் தமிழகத்தில் பெரும் விவாதங்களை கிளப்பிய நிலையில், அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ‘ஹவுஸ் வைஃப் பாவங்கள்’ என்ற தலைப்பில் புதிய வீடியோவை வெளியிட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.  ‘சொசைட்டி பாவங்கள்’ வீடியோ, ஆணவக் கொலைகள் மற்றும் சாதிய பெயரால் இளைஞர்களின் ஆற்றல் வீணாவதை எதிர்த்து பேசியதால் பரவலான ஆதரவைப் பெற்றாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்காகக் கொண்டு தாக்கியதாக விமர்சனங்களையும், காவல் துறையில் புகாரையும் சந்தித்தது. இந்த சர்ச்சை முடிவடையாத நிலையில், ‘ஹவுஸ் வைஃப் பாவங்கள்’ என்ற புதிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், “ஒரே வீடியோவில் தமிழ்நாட்டையே ததிகிடத்தோம் செய்துவிட்டு, இப்போது அடுத்ததை எதுவும் தெரியாதது போல இறக்கிவிட்டீர்களே!” என வியந்து, கோபி-சுதாகரை புகழ்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.  இந்த வீடியோ, இல்லத்தரசிகளின் அன்றாட பிரச்சினைகளை நகைச்சுவையுடன் கையாண்டு, மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி...

வீடியோவில் கோபி விட்ட அந்த ஒரு வார்த்தை.. சிக்கலில் பரிதாபங்கள் சேனல்.. இதை சொல்லாமல் இருந்திருக்கலாம்..

Image
‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலில் வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு, இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர்கள் கோபி மற்றும் சுதாகர். ஆனால், அவர்களின் சமீபத்திய ‘சொசைட்டி பாவங்கள்’ என்ற வீடியோ, ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும், சாதிய பெயரால் இளைஞர்களின் ஆற்றல் வீணாவதையும் பேசியிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு தாக்கியதாக விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இது இணையவாசிகளிடையே பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில், வேங்கைவயல் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள், வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக, அந்த இளைஞர் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அமைச்சரின் மகள் தொடர்ந்து போராடி வருகிறார். இதற்கெல்லாம், சொசைட்டி பாவங்கள் என்று வீடியோ வெளியிடாத கோபி, சுதாகர். வேறு சாதி பெண்ணை காதலித்த கவின் என்ற இளைஞர், அந்த பெண்ணின் அண்ணனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்...