'அமைதிப்படை' பட நடிகையின் உருக்குலைந்துபோன உடல்... இதயம் உடைக்கும் துயர சம்பவம் கடைசி நிமிடம் நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் எத்தனையோ அரசியல் நையாண்டித் திரைப்படங்கள் வந்தாலும், இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான 'அமைதிப்படை' திரைப்படத்திற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. படத்தில் சத்யராஜின் 'அமாவாசை' கதாபாத்திரம் எவ்வளவு பிரபலமோ, அதே அளவு சில நிமிடங்களே வந்தாலும் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் நடிகை ஜெயா வாகினி. அந்த மறக்க முடியாத காட்சி ஓட்டு எண்ணிக்கையின் போது 'ராஜராஜசோழன் எம்.ஏ' என்று பெயர் மாற்றிக்கொண்டு அமாவாசை செய்யும் அலப்பறைகள் இன்றும் மீம்ஸ்களில் பிரபலம். அந்த காட்சியில் மணிவண்ணனின் காதலியாக, சத்யராஜ் கைநீட்டி "பட்டா.. தள்ளி நில்லு" என்று சொல்லும் அந்த ஒரு காட்சியிலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை வாகினி. சீரியல் முதல் சினிமா வரை ஆந்திராவைச் சேர்ந்த இவர், தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். குறிப்பாக, தெலுங்கு சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். 2019-ல் வெளியான 'ரகுபதி வெங்கையா நாயுடு' தி...