Posts

Showing posts with the label Stanley Hospital

“என்னை சிறையிலேயே கொல்ல சதி” கதறும் பாலியல் குற்றவாளி.. 3 நாட்களாக ஞானசேகரனுக்கு நடந்த கொடூரம்.. மறைக்கப்பட்ட ரகசியம்..

Image
சென்னை: தமிழ்நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஞானசேகரன், புழல் சிறையில் தனக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சதி நடைபெறுவதாகக் கூறி, கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சிறை வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் பின்னணி 2024 டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படித்து வந்த ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞானசேகரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஞானசேகரன் திமுகவுடன் தொடர்புடையவர் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக பல திருட்டு வழக்குகளும் இருந்தன. விசாரணையின்போது அவரிடமிருந்து 120 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆத்முக வழக்கறிஞர் வரலட்சுமி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரிகள் சினேகபிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசார...

Mr.India மணிகண்டன் மரணம்! காரணம் தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்!

Image
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த மணிகண்டன் (41), இந்திய அளவில் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற பிரபல உடற்பயிற்சி வீரர்.  தனது அக்காள் கணவரைப் போல ஜிம் மாஸ்டராக வேண்டும் என்ற கனவுடன் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு, மிஸ்டர் இந்தியா மற்றும் மிஸ்டர் சவுத் இந்தியா பட்டங்களை பலமுறை வென்றார்.  மீஞ்சூரில் எம்கேஎம் உடற்பயிற்சி மையத்தை நடத்தி, இளைஞர்களுக்கு பயிற்சியளித்து, அவர்களை போட்டிகளுக்கு தயார்படுத்தி வந்தார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கமான incrediblemani25 மூலம் உடற்பயிற்சி குறிப்புகளை பகிர்ந்து ரசிகர்களை ஊக்கப்படுத்தினார். ஆனால், கடந்த ஜூலை 2, 2025 அன்று, கடுமையான வயிற்று வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் மணிகண்டன் உயிரிழந்தார்.  அவரது சகோதரி, அளவுக்கு மீறிய ஊக்க மருந்து (ஸ்டெராய்டு) பயன்பாடே மரணத்திற்கு காரணம் எனக் கூறினார். முன்னதாக, நண்பர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஊக்க மருந்து எடுத்த மணிகண்டன், ஒரு போட்டியின்போது மயங்கி விழுந்ததாக அவரது தாயார் தெரிவித்தார்.  இந்த ஸ்டெராய்டு பயன்பாடு உடல் உபாதைகளை ஏற்படுத்தியதாகவும், பொறாமையால...