Posts

Showing posts with the label Sulur police

காணாமல் போன காதல் மனைவி.. கணவனை தேடும் பக்கத்து வீட்டு பெண்.. ஒரு மாதத்தில் நடந்த திருப்பம்..

Image
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம், அண்ணாமலை தோட்டத்தில் அமைந்துள்ள ஒரு பஞ்சாலையில் பணிபுரியும் 24 வயது இளைஞர் சிவகுமார், தனது மனைவி கண்மணியை காணவில்லை என்று சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது திருமணம் நடந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், அதே பஞ்சாலையில் பணிபுரியும் 28 வயது தினேஷ் என்பவரும் காணாமல் போயுள்ளார். இவரது மனைவியும் கைக்குழந்தையுடன் அவரைத் தேடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம், கண்ணம்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகுமார், ஆறு மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு கேட்டரிங் சர்வீஸ் சென்டரில் சப்ளை மாஸ்டராக பணிபுரிந்தபோது, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 26 வயது கண்மணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மலர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கண்மணி, தனக்கு பெற்றோர் இல்லை என்றும், மேட்டுப்பாளையத்தில் ஒரு அக்கா மட்டுமே இருப்பதாகவும், அவர் காதல் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார் என்றும் சிவகுமாரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, சிவகுமார் கண்மணியை தனது சொந்த ஊரான மதுரை வாடி...