Posts

Showing posts with the label Sydney car crash

எட்டு மாத கர்ப்பிணி.. 19 வயசு இளைஞருக்கு வந்த ஆசை.. மருத்துவர்கள் கூறிய குலைநடுங்க வைக்கும் தகவல்...

Image
சிட்னி (ஆஸ்திரேலியா), நவம்பர் 19, 2025: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் வடக்கு பகுதியான ஹார்ன்ஸ்பி (Hornsby)யில் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) இரவு நடந்த கொடூரமான கார் விபத்தில், 8 மாத கர்ப்பிணியான 33 வயது இந்திய வம்சாவளி பெண் சமன்விதா தாரேஷ்வர் (Samanvitha Dhareshwar) மற்றும் அவரது கருவில் இருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம், உலகெங்கிலும் உள்ள இந்திய சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து எப்படி நடந்தது? இரவு 8 மணியளவில், ஹார்ன்ஸ்பியில் உள்ள ஜார்ஜ் ஸ்ட்ரீட் (George Street)யில் ரயில் நிலைய கார் பார்க் நுழைவாயில் அருகே சமன்விதா, தனது கணவர் வினீத் ராவ் நந்தலிகே மற்றும் 3 வயது மகனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கியா கார்னிவல் (Kia Carnival) வாகனம் ஒன்று குடும்பத்தினருக்கு வழிவிட்டு நின்றது. அதே நேரத்தில் பின்னால் வேகமாக வந்த வெள்ளை நிற பிஎம்டபிள்யூ (BMW) கார், கியா வாகனத்தின் பின்புறம் பகுதியில் மோதியது. இந்த வலுவான மோதலால் கியா கார் முன்னால் தள்ளப்பட்டு, நடைபாதையில் சென்று கொண்டிருந்த சமன்விதா மீது மோதியது.  இதில் பலத்த காயமடைந்த சமன்வித...