Posts

Showing posts with the label Türkiye

எண்டா மவனே.. எங்களை எதிர்க்க ஆயுதம் குடுக்குகிறியா.. துருக்கிக்கு இந்தியா வைக்கும் ஆப்பு..!

Image
2023 ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்நாட்டின் அங்காரா உள்ளிட்ட பகுதிகளை கடுமையாக பாதித்தபோது, இந்தியா முதல் நாடாக உதவிக்கு கரம் நீட்டியது. ‘ஆப்பரேஷன் தோஸ்த்’ என்ற மீட்பு நடவடிக்கையின் மூலம், இந்தியா தனது மனிதநேயத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது. இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறிய ‘கருடா’ ட்ரோன்களையும், மீட்பு பணிகளுக்கு ‘சி-17’ ரக போர் விமானங்களையும் அனுப்பியது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) துருக்கியில் இரவு பகலாக உயிர்களைக் காப்பாற்றினர். இந்த உதவிகள், இந்தியாவின் பெருந்தன்மையையும், அண்டை நாடுகளுடனான ஒற்றுமையையும் எடுத்துக்காட்டின. ஆனால், இந்த நன்றியை மறந்து, துருக்கி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கியது, உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 8-9, 2025 அன்று, பாகிஸ்தான் இந்தியாவின் மேற்கு எல்லையில், லே முதல் சர் கிரீக் வரை 36 இடங்களை குறிவைத்து 300-400 ட்ரோன்களை ஏவியது. இந்தியப் படைகள், இந்த ட்ரோன்களை திறம்பட தடுத்து அழித்தன. சிதைவுகளை ஆய்வு செய்தபோது, அவை துருக்கியின் ‘அசிஸ்கார்டு சோங்கர்’ ட்ரோன்கள் என உறுதியானது. இந்த ட்...