“அவளே தான் அதை பண்ண சொன்னா..” இளம்பெண்ணை நாசம் செய்த ஜெகஜால காக்கியின் கண்றாவி லீலை!
சென்னை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TNSPF) 13வது பட்டாளியனைச் சேர்ந்த காவலர் மாரியப்பன் (26) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், 2026 மார்ச் 27ஆம் தேதி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில், அவர் பிகாம் படித்துவிட்டு சென்னை ஆவடியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் டெலிகாலராக பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளார்.புகாரின் விவரங்கள்: கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13வது பட்டாளியன் துணை ஆணையருக்கு டிரைவராக இருந்த 2023 பேட்ச் காவலர் மாரியப்பன் (தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்) நண்பராக அறிமுகமானார். நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியது. 2025 நவம்பர் மாதத்தில், மாரியப்பன் “திருமணம் செய்து கொள்வேன், வெவ்வேறு சாதி என்பதால் வீட்டில் ஒப்புக்கொள்ளாவிட்டால் வீட்டை விட்டு வெளியேற...