Posts

Showing posts with the label Tamil TV Serials

கடைசியாக அதை உபயோகித்த இனியா.. சூப்பர்.. பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்..!

Image
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பாக்கியலட்சுமி" ( Baakiyalakshmi ) சீரியல் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  கணவரை பிரிந்து தனது பிள்ளைகளுக்காக போராடும் பாக்கியாவின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள இந்த சீரியல் பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.  தற்போது சீரியலில் இனியாவின் காதல் விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பாக்கியாவுக்காக பொறுமையாக இருந்த செல்வி கூட இனியாவின் செயலால் கோபமடைந்து வீட்டிற்கு வந்து சத்தம் போட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், இனியாவிற்கு அவளுடைய விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைக்க கோபி மற்றும் ஈஸ்வரி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திடீரென நிச்சயதார்த்தம் என்று மாப்பிள்ளை வீட்டார்களை வரவழைத்துள்ளனர்.  பாக்கியா இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கோபியும் ஈஸ்வரியும் அதனை பொருட்படுத்தாமல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆனால், இனியா தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இந்த கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.  தனக்கு விருப்பமில்லா...

திரைப்படங்கள் தலைப்பில் அதிகரிக்கும் டிவி சீரியல்கள் - பிரபல தயாரிப்பாளர் விளாசல் - அதிரடி ஸ்டேட்மென்ட்..!

Image
இப்போதெல்லாம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு பெரும்பாலும் திரைப்படங்களின் தலைப்பு தான் வைக்கப்படுகிறது. அந்த தலைப்புகள் மக்களிடம் ஏற்கெனவே பிரபலமாகி இருப்பதால் அது சீரியல்களின் ரீச்-சிற்கு உதவுகின்றது.  மௌனராகம் தொடங்கி யாரடி நீ மோகினி , ராஜா ராணி என இப்போது மின்னலே வரை சீரியல்கள் வந்து விட்டன. அடுத்து, தர்பார், வாரணம் ஆயிரம், போக்கிரி, மங்காத்தா என சீரியல்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்நிலையில், இதற்கு பிரபல தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகியுமான கேயார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, சின்னத்திரை தொடர்களால் சினிமா ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது.  ஆனால், முறையான அனுமதியில்லாமல் சினிமா படங்களின் தலைப்புகளை பயன்தடுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. ஒரு திரைப்படத்திற்கு கதை, காட்சிகள் உடல் என்றால், தலைப்பு என்பது தான் தலை போன்றது.  தலைப்பு மிகவும் முக்கியமானது. ஒரு படத்திற்கு முக்கியமாக தலைப்புதான் அங்கீகாரம். தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, இயக்குனர் மற்றும் அனைத்து கல...