உடலுறவு நேரத்தில் 58 வெட்டு.. மாடியில் 2 நிர்வாண உடல்கள்.. பையில் மனித தலைகள்.. கொடூர சம்பவம்..
கள்ளக்குறிச்சி : மலைக்கோட்டாளம் கிராமத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி தரும் இரட்டைக் கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், கொழஞ்சி(வயது 60) என்பவர் தனது மனைவி லட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் தங்கராசு ஆகியோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, திருச்சி மத்திய சிறையில் சரணடைந்துள்ளார். சம்பவத்தின் பின்னணி கோழஞ்சி, மலைக்கோட்டாளம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு முதல் மனைவியான காளியம்மாளுடன் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் பிரிந்து சென்றுவிட, கொழஞ்சிஇரண்டாவதாக லட்சுமி என்பவரை திருமணம் செய்தார். லட்சுமிக்கும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். மொத்தமாக ஆறு பெண் குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு கோழஞ்சியை சுமையாக அழுத்தியது. இதற்காக அவர் உள்ளூரிலும், அவ்வப்போது வெளியூர்களிலும் கூலி வேலை செய்து வந்தார். கள்ளக்காதல் மற்றும் மோதல் கொழஞ்சிஅடிக்கடி வெளியூர் சென்று வந்ததால், லட்சுமி தனிமையில் இருந்தார். இந்த சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவருடன் லட்சுமிக்கு நட்பு ஏற்பட...