பள்ளி மாணவி கர்ப்பம்! பரிசோதனையில் வெளியான வினோத உண்மை! அதிரடி கைது!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்வெங்கமூர் கிராமத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிறுமியை தவறான வழியில் நெருங்கியதாகக் கூறப்படும் அதே கிராமத்தைச் சேர்ந்த தரணிதரன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். சம்பவம் என்ன? மேல்வெங்கமூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த தரணிதரன், சிறுமியிடம் நட்பு கொண்டு, காதல் மற்றும் திருமணம் பற்றிய ஆசை வார்த்தைகளைப் பேசி அவருடன் நெருக்கமாகப் பழகியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் த...