Posts

Showing posts with the label Thiruvallur district

விடிஞ்சா கல்யாணம் குளியலறையில் சடலமான மணமகள்..! நடந்து என்ன..?

Image
திருத்தணை, அக்டோபர் 31: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், அத்திமஞ்சேரிப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் ராமுவின் மகன் மணியின் திருமணத்திற்கு முன்னதாகவே, வருங்கால மருமகள் சந்தியா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், இரு வீட்டினரையும் பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இன்று (அக்டோபர் 31) திட்டமிட்டிருந்த திருமணம் ரத்து ஆகியுள்ளது. பட்டதாரியான மணி, அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞராவார். அவருக்கு ஆந்திர மாநிலம், நகரி அருகிலுள்ள சித்தாளப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகள் சந்தியாவுடன் இரு வீட்டினரின் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) ஆந்திராவின் பல்ஜே கண்டிகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான மண்டபத்தில் திருமணம் நடக்கவிருந்தது. முந்தைய நாள் (அக்டோபர் 30) இரவு, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக புறப்படத் தயாராகியிருந்தபோது, சந்தியா குளியலறைக்குச் சென்றாள். வெகு நேரம் கழித்தும் வெளியே வராததால், குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். அங்கு சந்தியா சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அனைவரும் அதி...

“வெடித்து சிதறிய பெட்ரோல் டேங்கர் லாரி..” ஒரே நேரத்தில் 4 பேருக்கு நெஞ்சு வலி.. துடிதுடித்த பகீர் காட்சிகள்..!

Image
திருவள்ளூர், செப்டம்பர் 23 : திருவள்ளூர் மாவட்டம், புதுநகர் பகுதியில் பெட்ரோலிய டேங்கர் லாரியை வெல்டிங் செய்யும்போது டேங்கர் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விபத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ஊழியர் படுகாயமடைந்துள்ளார். அருகில் உள்ள கடைகள் சேதமடைந்தன. அதிர்ச்சியில் ஹோட்டலில் பணியாற்றிய நான்கு ஊழியர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புதுநகர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பெட்ரோலிய டேங்கர் லாரியை பராமரிப்பு பணியாக வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது, திடீரென டேங்கரில் இருந்து வெடிப்பு ஏற்பட்டது.  வெடிப்பின் சக்தியால் டேங்கர் சிதறி பறந்தது. இதனால் அருகில் இருந்த கடைகள் மற்றும் கட்டிடங்கள் கணிசமான சேதத்திற்கு ஆளானதாக தெரிகிறது.வெடிப்பு நிகழ்ந்ததும், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அலறி அடித்து கொண்டு சிதறி ஓடினர்.  விபத்தில் ஈடுபட்டிருந்த வெல்டிங் ஊழியர் கடுமையான காயங்களுடன் தவறினார். அவர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருக...