Posts

Showing posts with the label Thushara

திருமணம் பண்ணும் போது 55 கிலோ எடை.. இறக்கும் தருவாயில் 22 கிலோ.. கண்களை குளமாக்கும் கொடூர சம்பவம்..

Image
கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இரவு நேரங்களில் குழந்தைகள் அழுகுரல், விபத்து பாதிப்புகள், இதயம் தொடர்பான அவசரங்கள் என பல்வேறு சூழல்கள் அங்கு நிலவும். 2019 மார்ச் 21ஆம் தேதி இரவு, அந்த மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஆட்டோ டிரைவர், “சார், பக்கத்து வீட்டுப் பெண் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். தயவுசெய்து காப்பாற்றுங்கள்” என்று கதறினார். உடனடியாக அந்தப் பெண்ணை எமர்ஜென்சிக்கு கொண்டு சென்ற டாக்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அவரது பெயர் துசாரா. வயது 28. ஆனால் அவரது தோற்றம் வேறு கதையைச் சொன்னது. முடி உதிர்ந்து, எலும்பும் தோலுமாக மெல்லிய உடலுடன் இருந்தார். பல்ஸ் சரிபார்த்தபோது எந்த அறிகுறியும் இல்லை. சிபிஆர் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர் மருத்துவமனைக்கு வரும் முன்பே இறந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். ஒரு 28 வயது இளம்பெண் இப்படி எலும்பும் தோலுமாக இருப்பது டாக்டர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சராசரியாக 50 கிலோ இருக்க வேண்டிய உட...