கர்ப்பம்.! குழந்தை..! எல்லாமே பொய்.! எஜமான் பட மீனாவை மிஞ்சிய நடிப்பு ராணி..!
சென்னை அருகே வேலப்பஞ்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், கர்ப்பமாக இல்லாத ஒரு பெண் ஆண் குழந்தை பிறந்ததாகவும், மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திரைப்படக் காட்சியை மிஞ்சும் வகையில் அமைந்தது. பூந்தமல்லி அருகே உள்ள ஊராட்சி மன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் அஷோக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் மனைவி ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில், கணவரின் குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காக கர்ப்பமாக இருப்பதுபோல நாடகமாடியுள்ளார். சீமந்தம் விழா கூட நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின்படி, ஈஸ்வரி தனது தாயுடன் வேலப்பஞ்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு வயிற்று வலி என்று கூறி அனுமதி கேட்டுள்ளார். மருத்துவர்கள் அனுமதிக்க மறுத்த நிலையிலும், அவர் விடாமுயற்சியுடன் தங்கியிருந்தார். பின்னர், தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறி, இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று குழந்தையை ஊழியர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், பிறகு...