Posts

Showing posts with the label Unorganized Workers

இந்த கார்டு வச்சிருந்தா மாதம் 3000 ரூபாய் உங்களுக்கும் கிடைக்கும்?

Image
புது டெல்லி : நாட்டின் பெரும்பான்மையான தொழிலாளர்கள் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், சமூக பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு இ-ஷ்ரம் (e-Shram) அட்டைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் 16 முதல் 59 வயதுக்குள்உள்ள, வருமான வரி செலுத்தாத அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பெரும் நன்மை பயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இ-ஷ்ரம் அட்டையின் முக்கிய நோக்கம் அமைப்புசாரா தொழிலாளர்கள் (Unorganised Workers) என்றால், கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள், ஓட்டுநர்கள், தையல்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் மக்கள் ஆவர். இவர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இ-ஷ்ரம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அட்டை மூலம் தொழிலாளர்களின் விவரங்கள் தேசிய தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. கிடைக்கும் பலன்கள் காப்பீட்டுத் தொகை: விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் உடனடியாக குடும்பத்தினருக்கு வழங்கப்படும். ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வரை காப்பீ...