விசிகவுக்கு வாக்களிக்க வேண்டாம் - திருமாவளவன் பரபரப்பு அறிவிப்பு!
புதுச்சேரி, ஏப்ரல் 5 : புதுச்சேரியில் ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், திமுக - காங்கிரஸ் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில், ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை மற்றும் ஏனம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்தார். அந்த வேட்பாளர்கள் உடனடியாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், திமுக - காங்கிரஸ் கூட்டணியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், விசிகவுக்கு உழவர்கரை தொகுதி மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டது. இதனால், தனித்து போட்டியிடும் முடிவை விசிக கைவிட்டு, மீண்டும் கூட்டணியில் இணைந்தது. ஆனால், கூட்டணி தர்மத்தின்படி விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியைத் தவிர, மற்ற மூன்று தொகுதிகளில் (ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனம்) விசிக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்ப...