பைக்கை ஓவர்டேக் செய்த DC! இளைஞர் நெஞ்சில் ஓங்கி குத்து! காவலர்களுக்கு ஏன் இந்த கொலைவெறி!
திருநெல்வேலி (நெல்லை) : தமிழக வெற்றிக் கழகம் (தாவேக்க) தலைவர் விஜய் நெல்லை கேடிசி நகர் பகுதியில் மதியம் 2 மணியளவில் ரோட் ஷோ நடத்தியபோது, பிரச்சார வாகனத்தை முன்பும் பின்பும் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்களில் ஒருவர், மாநகர காவல் துணை ஆணையாளர் (டிசி) விஜயகுமார் உட்பட போலீஸாரால் பகிரங்கமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை விதிகளைப் பின்பற்றி ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞரை, பின்னால் வந்த டிசி விஜயகுமாரின் கார் ஓவர்டேக் செய்து பைக்கின் முன்பு திடீரென நிறுத்தியது. உடனே காரிலிருந்து இறங்கிய டிசி விஜயகுமார், இளைஞரின் நெஞ்சு பகுதியில் ஓங்கி ஒரு குத்து விட்டார். அவருடன் இருந்த மற்றொரு காவலர் திருப்பதிராஜன் என்பவரும் இளைஞரின் நெஞ்சில் பலமுறை வெறிகொண்டு குத்தியுள்ளார். இளைஞர் “சார் ஒரு நிமிஷம், எதுக்காக அடிக்கிறீங்க?” என்று கேட்டதற்கு பதில் அளிக்காமல், காரின் பின்னால் வந்த அதிவிரைவு படை (Quick Response Team) காவலர்கள் பைக்கை கீழே தள்ளிவிட்டு இளைஞரை சாலையோரத்துக்கு இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக வீடியோவில் தெரிகிறது. “ஏய் வாட்டமா வா” என்று...