பள்ளி மாணவியை காருக்குள் வைத்து.. காது கூசும் கொடுமையை அரங்கேற்றிய கணக்கு வாத்தி வில்லியம் பால்ராஜ்..
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பாதிரியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கணக்கு ஆசிரியராகப் பணியாற்றி வந்த வில்லியம் பால்ராஜ் மீது 11-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, ஆசிரியர் வில்லியம் பால்ராஜ் தன்னை பார்ப்பது, தொடுவது, கிள்ளுவது, உரசுவது போன்ற தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தேர்வில் குறைவான மதிப்பெண் என்று மிரட்டி தன்னை கட்டுப்பாட்டில் வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், பள்ளி முடிந்த பின்னர் அவரை காரில் அழைத்துச் சென்று ஆசிரியர் அத்துமீறியதாகவும், இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை மிரட்டல் விடுத்து கதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் தெரிவித்த மாணவி, மான அவமானத்துக்கு அஞ்சி புகார் அளிக்காமல், பெற்றோரால் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஆனால், இந்த சம்பவத்தை அறிந்த மாணவியின் தோழிகள் ஐந்து ப...