நோயாளியுடன் நர்ஸ் உடலுறவு.. நொடியில் பறிபோன உயிர்...விசாரணையில் நர்ஸ் கூறிய வினோத தகவல்!
வ்ரெக்ஸ்ஹாம் (வேல்ஸ்) : பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள வ்ரெக்ஸ்ஹாம் மேலோர் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் ஒருவர், தனது நோயாளியுடன் ரகசிய உறவில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உறவின் போது நோயாளி உயிரிழந்த சம்பவம், செவிலியர் பெனலோப் வில்லியம்ஸ் (வயது 42) மீது கடும் நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது. 2022 ஜனவரி மாதம் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், சிறுநீரக பாதிப்பால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் (பேஷண்ட் ஏ என்று அழைக்கப்படுபவர்), சிகிச்சை முடிந்து மருத்துவமனை கார் பார்க்கிங்கில் தனது காரின் பின் சீட்டில் செவிலியருடன் உடலுறவில் ஈடுபட்ட போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இறப்புக்கான காரணம் "மாரடைப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்" என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தன்று, செவிலியர் வில்லியம்ஸ் ஆம்புலன்ஸை அழைக்காமல், தனது சக ஊழியர் ஒருவரை மட்டும் உதவிக்கு அழைத்தார். அந்த ஊழியர் வந்த போது நோயாளி ஓரளவு ஆடை களைந்த நிலையில் பதில் அளிக்காத நிலையில் இருந்தார். அவர் தான் உடனடியாக 999 அழைத்து ஆம...