நயன்தாராவா இது..? ஆங்கில படங்களை மிஞ்சும் கிளாமர்! அதிலும் வாயில் அதை வைத்து இழுத்து.. வைரல் வீடியோ!
கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய படமான 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' இன் புதிய காட்சிகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை நயன்தாரா, யஷ் உடன் இணைந்து தோன்றும் காட்சிகள் ரசிகர்களை வியக்க வைத்து வருகின்றன. குறிப்பாக, யஷ் பிடித்த சிகரெட்டை நயன்தாரா தனது வாயில் வைத்து புகையை உள்ளிழுத்து ஊதும் அந்த காட்சி, இணையத்தை அதிர வைத்துள்ளது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படம், ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. யஷ், நயன்தாரா, கியாரா அட்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் இப்படம், ஏற்கனவே பல டீசர்கள் மற்றும் லுக் போஸ்டர்களின் மூலம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நயன்தாரா 'கங்கா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது முதல் லுக் போஸ்டரில் கிளாமரான கருப்பு ஆடை, உயரமான பூட்ஸ் மற்றும் துப்பாக்கியுடன் தோன்றியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வைரல் ஆகும் காட்சிகள் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. ...