கள்ளக்காதலனின் விபரீத உடலுறவு ஆசை.. நிறைவேற்றிய மனைவி.. போலீசில் கணவன் கொடுத்த பகீர் புகார்..
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜபியுல்லா என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதான கதீஜா ஜல் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. இதன் விளைவாக, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வந்தனர். விவாகரத்துக்குப் பின் கதீஜா ஜல், தனது குழந்தைகளுடன் கபூராபாத் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இர்ஃபான் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறி, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவாக வளர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இர்ஃபான், கதீஜாவின் 7-ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் உறவு கொள்ள விரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து, ஆசை வார்த்தைகள் கூறி ஏலகிரி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிய...