Posts

Showing posts with the label religion conversion

21 ஆண்டுகளுக்கு பிறகு SIR-ல் சிக்கிய கொடூரன்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்.. மிரண்டு போன போலீஸ்..

Image
ஆவடி, நவம்பர் 27 : ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட என்னூர் காவல் நிலையத்தில் 2004ஆம் ஆண்டு மே மாதம் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி, 20 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார். பழைய வழக்குகளை மறு ஆய்வு செய்த ஆவடி காவல் ஆணையர் உத்தரவின் பேரில், சிறப்பு குழு அமைத்து நடத்திய விசாரணையில் இந்தக் கைது நடைபெற்றுள்ளது. 2004ஆம் ஆண்டு மே மாதம், என்னூர் காவல் நிலையத்தில் மரியம் பேபி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலையான நபர் அமானுல்லா என்பவரின் அண்ணன் என்று தெரியவந்தது. அப்போதைய விசாரணையில், குற்றவாளியாக ராஜேந்திரன் (அப்பா பெயர்: பரமசிவம்) என்பவர் அடையாளம் காணப்பட்டார். அவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. இருப்பினும், அப்போது அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஆவடி காவல் ஆணையர் பொறுப்பேற்ற பிறகு, பழைய வழக்குகளை வாரந்தோறும் மறு ஆய்வு செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார். சுமார் 20 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தபோது, குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை...