வயசான காலத்துல இதெல்லாம் தேவையா? விவகாரமான கதாபாத்திரத்தில் அனுஷ்கா! ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்!
44 வயதாகும் நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது தன்னை விட சுமார் 20 வயது குறைவான இளம் நடிகருடன் ரொமான்டிக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு வெப் சீரிஸ் வடிவில் வெளியாகவுள்ளது. இந்தத் திட்டம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில், வயது இடைவெளி அதிகமுள்ள காதல் கதை என்பது இந்திய சினிமாவில் இன்னும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்த வெப் சீரிஸ் Feel Good தன்மை கொண்டதாக இருக்கும் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூகத்தில் பெண்களின் வயது, காதல், உறவுகள் குறித்த பார்வையை இன்னும் திறந்த மனதுடன் அணுகும் வகையில் ஒரு இனிமையான, நேர்மறையான கதையை ரசிகர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது. அனுஷ்காவின் இயல்பான நடிப்பாற்றலும், அவரது முதிர்ச்சியான தோற்றமும் இந்தக் கதாபாத்திரத்துக்கு மிகச் சரியாகப் பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அனுஷ்கா Miss Shetty Mr Polishetty போன்ற படங்களில் வயது வித்தியாசம் கொண்ட ரொமான்ஸை மிக அழகாகக் கையாண்டிருந்தாலும், இம்முறை வெப் சீரிஸ் வடிவில் இன்னும் ஆழமான, உணர்வுபூர்வமான கதை சொல்...