02:30 மணிக்கு பள்ளியில் இருந்து கிளம்பிய டீச்சர்! தலைமுடி, பற்கள் இல்லாமல் முழு நிர்வாணமாக கடற்கரையில் பிணமாக.. விசாரணையில் பகீர்..
காசரகோடு, 2020 ஜனவரி: கேரளாவின் காசரகோடு மாவட்டம், மஞ்சேஸ்வர் அருகே உள்ள மியாபடவு பகுதியில் வசித்து வந்த 44 வயதான பி.கே. ரூபாஸ்ரீ என்ற பள்ளி ஆசிரியை, 2020 ஜனவரி 16-ஆம் தேதி மாலை வீடு திரும்பவில்லை. அவர் பணிபுரிந்த ஸ்ரீ வித்யா வர்தகா உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றிய ரூபாஸ்ரீ, அன்று மதியம் எமர்ஜென்சி வேலை என்று கூறி பள்ளியை விட்டு கிளம்பினார். அவரது ஸ்கூட்டர், வீட்டுக்கு அருகிலுள்ள துர்க்கிபள்ளம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை காம்பவுண்ட் அருகே கிடைத்தது. ஜனவரி 18-ஆம் தேதி, கும்ளா அருகே உள்ள கோயிப்பாடி கடற்கரையில் அவரது உடல் முழு நிர்வாண நிலையில் கரை ஒதுங்கியது. உடலில் தலைமுடி முழுவதும் ஷேவ் செய்யப்பட்டிருந்தது, பற்கள் பிடுங்கப்பட்டு கொடூரமாக இருந்தன. ஆரம்பத்தில் தற்கொலை என்று கருதப்பட்ட வழக்கு, பிரேத பரிசோதனையில் கொலையாக உறுதியானது. போலீஸ் விசாரணையில், ரூபாஸ்ரீயுடன் அதே பள்ளியில் டிராயிங் ஆசிரியராகப் பணியாற்றிய கே. வெங்கிடரமண காரந்த் (42) மீது சந்தேகம் ஏற்பட்டது. ரூபாஸ்ரீயின் மகனும் உறவினர்களும், வெங்கிடரமணா அவரை தொல்லை கொடுத்து வந்ததாகவும், அச்சுறுத்தியதாகவும...