மருமகளை கோயிலுக்கு அனுப்பி விட்டு மாமியார் செய்த அசிங்கம்.. விசாரணையில் வெளியான கண்றாவி ரகசியம்..
சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது வினோத், சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் கிருஷ்ணவேணியின் (53) பாசமிகு அரவணைப்பில் வளர்ந்தவர். சென்னையில் முக்கிய இடங்களில் இருந்த சொத்துக்கள் மூலம் கிடைத்த வருமானம் இவர்களது வாழ்க்கையை செம்மையாக்கியது. 2023-ல் அரக்கோணத்தைச் சேர்ந்த வினோதினியை வினோத் திருமணம் செய்தார். மகிழ்ச்சியாகத் தொடங்கிய இவர்களது வாழ்க்கையில், திடீரென ஒரு நெருடல் உருவாகியது. இதன் பின்னணியில் மறைந்திருந்த அதிர்ச்சிகரமான உண்மை, தம்பதியினரை அதிரவைத்தது.வினோத்தின் தாய் கிருஷ்ணவேணி, திருமணத்துக்குப் பிறகு மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் செல்லுமாறு திரும்பத் திரும்ப வற்புறுத்தினார். "நீங்கள் தனியாக வாழுங்கள், மாதச் செலவுக்கு பணம் கொடுத்தால் போதும்" என்று கூறிய அவர், கூட்டுக் குடும்பமாக வாழ விரும்பிய வினோத்தின் முடிவை மீறி, தனிக்குடித்தனம் பற்றி அடிக்கடி பேசி வந்தார். வினோத், "நானே அம்மாவின் ஒரே மகன், அவரை விட்டுப் பிரிந்து செல்ல மாட்டேன்" என்று உறுதியாக இருந்தார். வினோதினியும் இதை ஆதரித்தார்.ஆனால், கிருஷ்ணவேணியின் நடவடிக்கைகள் மீது வினோதினிக்கு சந்தேகம...