2 மாணவிகளை தாயாக்கிய இளைஞர்.. பள்ளி மாணவிக்கு பெண் குழந்தை.. கல்லூரி மாணவிக்கு ஆண் குழந்தை..
நீலகிரி மாவட்டம் உதகை : காதல் என்ற பெயரில் இளம் பெண்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்க்கையை சிதைத்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் உதகையில் அரங்கேறியுள்ளது. 22 வயது இளைஞன் பிரவீன், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தை போல, ஒரே நேரத்தில் இரண்டு மாணவிகளை காதலித்து, அவர்களை கர்ப்பமாக்கிய கொடூர செயல் வெளியாகியுள்ளது. இதனால், 15 வயது பள்ளி மாணவியும், 18 வயது கல்லூரி மாணவியும் கைக்குழந்தைகளுடன் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். இந்த 'ரோமியோ' போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்! காதல் வலையில் சிக்கிய பள்ளி மாணவி: திருமண ஆசை காட்டி உல்லாசம்! உதகையைச் சேர்ந்த பிரவீன், டிப்ளமோ படித்து முடித்து கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறான். கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதே ஊரைச் சேர்ந்த 15 வயது 10ஆம் வகுப்பு மாணவியுடன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, ஊர் சுற்றி, காதல் பரிசுகள் பரிமாறிக் கொண்டனர். சண்டை, பிரிவு, சேர்க்கை என லூப் போல தொடர்ந்த இந்த காதலில், பிரவீன் திருமணம் செய்வதாக ஆசை காட்டி மாணவியுடன் உடலுறவு கொண்ட...