Posts

Showing posts with the label separate family

“கணவனுக்கு தெரியாமல் கர்ப்பமான மனைவி” அடுக்கடுக்காக வைத்த போலி புகார்கள்! வெளிச்சத்திற்கு வந்த அசிங்கமான பக்கங்கள்!

Image
சென்னை : கொரோனா காலத்தில் அரங்கேறிய ஒரு ஏற்பாட்டுத் திருமணம், சபரிமலை மாலை போட்ட கணவருக்கு எதிராக மனைவியின் பொய் வரதட்சணை கொடுமை புகார், மருத்துவப் பதிவுகளில் வெளியான அதிர்ச்சி உண்மை... இப்படி பல திருப்பங்களுடன் நடைபெற்ற ஒரு குடும்ப வழக்கில், கணவர் இறுதியில் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை பெற்றுள்ளார். வழக்கறிஞர் ராஜேஸ்வரி சமீபத்தில் ‘கலாட்டா பிங்க்’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்த வழக்கின் முழு விவரங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த விவரங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. வழக்கின் தொடக்கம் 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் 20 பேருடன் சிறிய அளவில் நடைபெற்ற திருமணம். மனைவி பட்டதாரி, தொழில்முறைப் பெண். கணவர் ஐடி துறையில் பணியாற்றுபவர். திருமணத்துக்குப் பின் தனிக் குடித்தனம் அமைக்க ஏற்பாடு செய்த கணவர், மனைவிக்கு அருகிலேயே கிளினிக் ஒன்றையும் தொடங்கி முழு வசதிகளும் செய்து கொடுத்தார். திருமணம் ஜூலை மாதம். நவம்பர் இறுதியில் கணவர் சபரிமலை மாலை போட்டார். டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் சபரிமலைக்குச் சென்றார். அதே ஜனவரி முதல் வாரத்தில் மனைவி “எக்ஸாம் இருக்கிறது”...