உருகி உருகி காதல்.. திருமணமான 9 நாளில் அரங்கேறிய கொடூரம்.. சென்னையை அதிர வைத்த இளம் தம்பதி.. விசாரணையில் பகீர்
சென்னை : காதல் திருமணம் செய்து கொண்டு வெறும் 9 நாட்களே ஆன நிலையில், மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை குன்றத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள மூன்றாம் கட்டளை, தளபதி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் விஜய் (வயது 25). இவர் சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த யுவஸ்ரீ (24) என்பவருடன் காதலித்து வந்த விஜய், கடந்த டிசம்பர் 13-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை பகுதியில் வாடகை வீட்டில் புதிதாக குடியேறினர். நேற்று (டிசம்பர் 22) மாலை முதல் வீடு பூட்டியிருப்பதாகவும், உள்ளே இருந்து யாரும் வெளியே வராததாகவும் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். யுவஸ்ரீயின் தங்கை வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியும் திறக்காததால், குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்த போது, கட்டிலில் யுவஸ்ரீ ரத்தம் வழிய இறந்து ...