Posts

Showing posts with the label stress

முதல்வர் உடல் நிலை மோசமாக காரணமே இது தான்.. கொந்தளித்த நடிகர் விஜய்யின் நண்பர்!

Image
ன்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21, 2025 அன்று காலை நடைபயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு எந்தவொரு பெரிய பிரச்சனையும் இல்லை என்றும், மேலதிக பரிசோதனைகளுக்காக மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை கவனித்து வருவதாகவும், இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் மற்றும் நடிகர் விஜயின் நண்பர் என அறியப்படும் நடிகர் தாடி பாலாஜி வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், முதலமைச்சரின் உடல்நலக் குறைவுக்கு திமுகவினரின் செயல்களால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். தாடி பாலாஜி தனது வீடியோவில், “முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நலக் குறைவு குறித்து கேள்விப்பட்டதிலிருந்து என் மனது சரியில்லை. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். ஆனால், அவரது உடல்நலக் குறைவுக்கு மன உளைச்சல் முக்கிய காரணம். முதலமைச்சர் ஒரு நிகழ்ச்சியில், ‘...