வலிக்குது.. விடுங்க மிஸ்.. கதறிய 16 வயது மாணவன்.. உல்லாச வெறியில் 31 வயது ட்யூசன் ஆசிரியை செய்த அசிங்கம்..!
கான்பூரின் ராய்பூர்வா பகுதியில், பகவதி வில்லா அபார்ட்மெண்டில் வசித்து வந்தார் மனீஷ் கனோடியா என்ற துணி வியாபாரி. அவரது மனைவி சோனியா, மகன் குஷாக்ரா. குஷாக்ரா 16 வயது. ஜெய்புரியா ஸ்கூலில் 10ஆம் வகுப்பு படித்து வந்தான். படிப்பில் மிகவும் ஆர்வமுள்ள, அமைதியான, நல்ல பையன். வீட்டில் இருந்து சில நிமிட தூரத்தில் இருந்த கோச்சிங் செல்லும் வழக்கம். அந்தக் குழந்தைக்கு முன்பு வீட்டிலேயே டியூஷன் எடுத்திருந்தாள் ஒரு பெண் – ரசிதா வத்ஸ். வயது சுமார் 31. அவள் படிப்பு சொல்லிக் கொடுப்பதில் நல்ல பெயர் வாங்கியிருந்தாள். குஷாக்ராவும் அவளை நம்பினான். ஆசிரியை என்ற மரியாதையோடு பார்த்தான். ஆனால் ரசிதாவுக்கு வேறு திட்டம் இருந்தது. சொர்ப்ப வருமானத்தை வைத்து எப்படி உல்லாசமாக வாழ முடியும். நாமும் வீடு, கார் என செட்டிலாக வேண்டும். அவளுக்கு ஒரு காதலன் – பிரபாத் ஷுக்லா, வயது 32. அவனோடு சேர்ந்து ஒரு நண்பன் – சிவா குப்தா (அல்லது ஆர்யன் என்றும் அழைக்கப்பட்டவன்), வயது 32. மூவரும் சேர்ந்து ஒரு கொடூர திட்டத்தை தீட்டினார்கள் – பணத்துக்காக குஷாக்ராவை கடத்தி, பெரிய தொகை கேட்டு பணம் பறிப்பது. 2023 அக்டோபர் 30 அன்று மாலை 4 மணி அளவி...