ரூமுக்குள் கணவனும், சிறுமியும்...! வெளியே காவலுக்கு நின்ற மனைவி..! நாட்டையே உலுக்கிய கொடூரம்..
திண்டுக்கல், செப்டம்பர் 13, 2025 : கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த 14 வயது சிறுமியை கடத்தி, ஜோசியரின் போலி அறிவுரையை நம்பி மிருகத்தனமான சூழ்ச்சியில் ஈடுபட்ட தம்பதிக்கு தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது. 2021ஆம் ஆண்டு நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கான தீர்ப்பு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானது, சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான அழகுராஜா (35) மற்றும் அவரது மனைவி ராமலட்சுமி (32) ஆகியோர், தங்கள் ஆயுள் அதிகரிக்கும் என ஜோசியர் சொன்ன போலி பரிகாரத்திற்காக 14 வயது சிறுமியை இலக்காக்கினர். ஜோசியரிடம் சென்ற தம்பதி, அழகுராஜாவின் கைரேகைகளைப் பார்த்து, "உன் ஆயுள் குறுகியது. ஒரு சிறுமிக்கு தாலி கட்டி, அவளுடன் ஒரு நாள் மட்டும் உறவு கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்" என ஜோசியர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதை நம்பிய ராமலட்சுமி, "என் கணவர் நீண்ட ஆயுள் வாழ வேண்டும், அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன்" எனத் தியாகமாகப் பேசியதாக விசாரணையில் தெரியவந்தது. இதன் விளைவாக, 2021 ஜூலை மாதம், திண்டுக்கல் பழைய வத்தலகுண்டு ரைஸ் மில் தெரு...