Posts

Showing posts with the label supporting actress

சடலமாக கிடந்த இயக்குநர் “சிவப்பு மஞ்சள் பச்சை' நடிகை உட்பட 9 பேர் சிக்கிய பின்னணி சவுக்குத் தோப்பில் பயங்கரம்!

Image
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சு.பில்ராம்பட்டு (பெல்ராம்பட்டு) கிராமத்தில் உள்ள சவுக்குத்தோப்பு ஓடையில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி காலை அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், உடற்கூறாய்வில் சடலத்தில் தலை, கழுத்து, உடல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது தெரியவந்ததால், கொலை வழக்காக மாற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஒருவர், மூன்று எஸ்ஐக்கள் உட்பட 12 பேர் கொண்ட நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்: தனிப்படை போலீசார் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மார்ச் 3-ஆம் தேதி இரவு தொப்பி அணிந்த ஒரு நபர் ஆட்டோவில் செல்வது பதிவாகியிருந்தது. ஆட்டோ பதிவு எண் மூலம...