அடர்ந்த காட்டில் காருக்குள் பெண் சடலம்.. விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்.. யாரை நம்புவது.?
காரைக்குடி, நவம்பர் 7: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதூர்பாண்டியர் நகரைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண், தனது சொகுசு காரில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது வீட்டருகே வசித்து வந்த சசிகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடன் சுமையிலிருந்து தப்பிக்க, பெண்ணை அழைத்துச் சென்று தலையில் கல்லால் அடித்துக் கொன்று, அவரது 13 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைப் பிடித்த காவல்துறை, நகைகளையும் மீட்டுள்ளது.மருதூர்பாண்டியர் நகரைச் சேர்ந்த பாண்டிகுமார், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி மகேஸ்வரி (வயது 35), இரு பெண் குழந்தைகளுடன் காரைக்குடியில் வசித்து வந்தார். இடம் வாங்கி விற்பனை செய்யும் தரகர் வேலையையும் மேற்கொண்டு வந்தவர். நேற்று அதிகாலை, திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆரப்பொய்யை என்ற இடத்தில், தைலமரக் காட்டுப் பகுதியில் மகேஸ்வரியின் உடல், அவரது சொகுசு காருக்குள் படுதடியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தலையில் கல்லால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.காவல்துறை விசாரணையின்படி, சம்பவத்தன்று காலை, அண்டைவீட...