அண்டா அண்டாவாக பிரியாணி கிண்டி.. ரூ70ஆயிரம் கோடி மோசடி தெளிவாக போட்டுக்கொடுத்த 'AI'
இந்தியாவில் பிரியாணி உணவகங்கள் மூலம் நடந்த பெரும் வரி ஏய்ப்பு மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறை நடத்திய விசாரணையில், கடந்த ஆறு ஆண்டுகளில் (2019-20 முதல் தற்போது வரை) சுமார் ₹70,000 கோடி மதிப்பிலான விற்பனை வருவாயை உணவகங்கள் மறைத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எப்படி தொடங்கியது இந்த விசாரணை? ஹைதராபாத்தில் உள்ள பிரபல பிரியாணி உணவக சங்கிலிகளில் (சில முக்கிய பிரியாணி சங்கிலிகள்) வழக்கமான சோதனை (ரெய்டு) நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், உணவகங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்த நிலையில், பில்லிங் சிஸ்டத்தில் காட்டப்படும் ஆர்டர்கள் மிகக் குறைவாக இருப்பதைக் கண்டனர். உதாரணமாக, 50 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், 10-15 பேருக்கான பில்கள் மட்டுமே பதிவாகியிருந்தன. இது சாதாரண வரி ஏய்ப்பு என்று தோன்றினாலும், ஆழமான விசாரணையில் ஒரு பெரிய மோசடி வலையமைப்பு இருப்பது தெரிய வந்தது. இந்த உணவகங்கள் பயன்படுத்திய பொதுவான பில்லிங் சாப்ட்வேர் (ஒரே மென்பொருள்) இந்தியா முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவகங்களால் (சுமார் 1.77 லட்சம் உணவகங்கள்) பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இ...