Posts

Showing posts with the label temple priest course

மாதம் ரூ.10,000 அறிவிப்பு! தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்! கடைசி வாய்ப்பு!

Image
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழ் மற்றும் ஆகம முறைகளின்படி அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2026-27 ஆம் ஆண்டுக்கான அர்ச்சகர் பயிற்சி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் அர்ச்சகர் பயிற்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பயிற்சிக்கான விண்ணப்பம் மே 23, 2026 அன்று தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் ஜூன் 27, 2026 வரை விண்ணப்பிக்கலாம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. பயிற்சியின் சிறப்பம்சங்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் இந்த ஒரு ஆண்டு கால பயிற்சியில் மாணவர்கள் ஆகம விதிகளின்படி வழிபாட்டு முறைகளை முழுமையாகக் கற்றுக் கொள்வார்கள். பயிற்சியில் கற்பிக்கப்படும் முக்கிய பாடங்கள்: தினசரி பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நைவேத்தியம் செய்யும் முறைகள் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப்பிரபந்தம் உள்ளிட்ட மந்திரங்கள் மற்றும் பாடல்கள் திருமணம், புது...